வாழப்பாடி அருகே நரி பொங்கலில் மோதல்; 4 வாலிபர்கள் கைது


வாழப்பாடி அருகே நரி பொங்கலில் மோதல்; 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 Jan 2023 1:54 AM IST (Updated: 22 Jan 2023 2:02 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே நரி பொங்கலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

வாழப்பாடி,

வாழப்பாடி அடுத்த ரங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). இவருடைய தம்பி அரவிந்த்குமார் (20), உறவினர்கள் பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேர், சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற நரி பொங்கலை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அதிக ஹாரன் சத்தம் எழுப்பியபடி வந்ததாக கூறி, சின்னமநாயக்கன் பாளையம் வாலிபர்கள், இவர்கள் 4 பேரையும் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார், அரவிந்த்குமார், பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேரையும் சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வாலிபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தோஷ்குமார் தரப்பினர் வாழப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் தாக்கியதாக, சின்னம நாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த வைரமணி (31), பிரவீன்குமார் (28), பிரேம்குமார் (20), வெங்கடேஷ் என்ற ஜெமினி (19) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.


Next Story