சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் மோதல்:7 பேர் மீது வழக்கு


சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் மோதல்:7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் மோதலில் ஈடுபட்ட தந்தை-மகன் உள்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் தானியேல். இவருடைய மகன் செல்வபிரபு. தந்தை, மகனுக்கு சொத்து பிரச்சினை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் உழவு மேற் கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் தானியேல், காலேப், செல்வபிரபு, ஏஞ்சல் ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தானியேல் மகன்கள் யோசேப்பு (35), காலேப் (27), ஆகியோர் தனித்தனியாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி யோசேப்பு அளித்த புகாரின் பேரில் அவரது தந்தை தானியேல், சகோதரர்கள் காலேப், யாக்கோபு, உறவினர் கோயில்ராஜ், ஆகியோர் மீதும், காலேப் கொடுத்த புகாரின் பேரில் யோசேப்பு, அவரது மனைவி ஏஞ்சல், செல்வபிரபு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story