நாய் கடிக்க வந்ததில் கோஷ்டி மோதல்


நாய் கடிக்க வந்ததில் கோஷ்டி மோதல்
x

நாய் கடிக்க வந்ததில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த மீனாட்சி மங்கலம் காளிவட்டத்தை சேர்ந்தவர் பில்லா. இவரது அண்ணன் மகனை, மேல்அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த அஜய் என்பவரது நாய் கடந்த 9-ந் தேதி கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாயை கட்டி வைக்குமாறு பில்லா கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்குல் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 15-ந் தேதி மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கையாலும், தடியாலும் தாக்கிக்கொண்டனர்.

இதில் அஜய், பில்லா இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அஜய் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ்குமார், பில்லா, நித்திஷ் உள்ளிட்ட 7 பேர் மீதும், பில்லா கொடுத்த புகாரின் பேரில் அஜய், சக்கரவர்த்தி, ரமணா உள்ளிட்ட 4 பேர் மீதும் ஜோலார்பேட்டை போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இரு தரப்பை சேர்ந்த பில்லா (40), சதீஷ்குமார் (21), அஜய் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story