8-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


8-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
x

அரசு பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

2022 -2023-ம் கல்வி ஆண்டில் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு வருகிற பிப்ரவரி 25-ந்தேதி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் படிப்பு உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்ய வட்டார அளவில் தேர்வு மையங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை நேற்று (26-ந்தேதி) முதல் வருகிற ஜனவரி 20-ந்தேதி வரை, http://dge 1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத் தொகை ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 24-ந் தேதி ஆகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story