தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது


தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது
x

தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருட்செல்வன். கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி யுவராணி. இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுடைய 14 வயது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்காக விடுதியில் தங்கியிருந்தார்.

கடந்த 12-ந் தேதி வீட்டுக்கு வந்திருந்த மாணவனிடம் படிக்க சொல்லி யுவராணி அறிவுரை கூறியுள்ளார். அதற்கு மாணவன் மறுத்து தான் இனி விடுதிக்கு செல்ல போவதில்லை என வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அன்று நள்ளிரவு தூக்கத்தில் இருந்து விழித்த மாணவன் ஆத்திரம் அடைந்து, தூங்கிக்கொண்டு இருந்த தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டான். இதில் யுவராணி பரிதாபமாக உயிரிழந்தான்.

கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாணவனை தேடி வந்தார்கள். இந்தநிலையில் நேற்று புங்கம்பள்ளியில் இருந்து விண்ணப்பள்ளி நோக்கி மாணவன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையிலான போலீசார் மாணவனை பிடித்து கைது செய்தார்கள்.

இதையடுத்து சிறுவனை போலீசார் ஈரோடு இளைஞர் நீதி குழுமம் முன்பு ஆஜர்படுத்தி கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தார்கள்.


Next Story