வகுப்பறை கட்டுமான பணிகள்


வகுப்பறை கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 2 April 2023 12:45 AM IST (Updated: 2 April 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

வகுப்பறை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

நாகப்பட்டினம்

கிழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளையும் கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேயம் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குருமணாங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், இருக்கை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டிலும், ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், வெண்மணி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும் வகுப்பறை கட்டும் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ராஜ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, உதவி பொறியாளர்கள் பாலச்சந்திரன், கிரிதரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜனனி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story