தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியல் - தமிழகம் கடைசி இடம்


தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியல் - தமிழகம் கடைசி இடம்
x

தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

புதுடெல்லி,

தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் பட்டியலில் கோவை 42-வது இடத்தையும், சென்னை 44-வது இடத்தையும், மதுரை 45-வது இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு சென்னை ஒரு இடம் பின்தங்கியுள்ளது. கோவை மற்றும் மதுரை ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளன.

10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள நகரங்களில் சேலம் 221-வது இடத்தையும், தூத்துக்குடி 226-வது இடத்தையும், நாகை 261-வது இடத்தையும், திருச்சி 262-வது இடத்தையும், புதுக்கோட்டை 267-வது இடத்தையும், திருவண்ணாமலை 271-வது இடத்தையும், கும்பகோணம் 287-வது இடத்தையும், தாம்பரம் 288-வது இடத்தையும், வேலூர் 291-வது இடத்தையும், கடலூர் 291-வது இடத்தையும் பிடித்தன.

மேலும், ஆவடி 302-வது இடத்தையும், நெல்லை 308-வது இடத்தையும், திண்டுக்கல் 316-வது இடத்தையும், ஈரோடு 322-வது இடத்தையும், திருப்பூர் 377-வது இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல், ஆம்பூர் 338-வது இடத்திலும், ராஜபாளையும் 339-வது இடத்திலும், காஞ்சிபுரம் 356-வது இடத்திலும், காரைக்குடி 371-வது இடத்திலும் உள்ளன.

தென் மண்டலத்தில் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் புதிய மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவில் கோவை மாவட்டத்தில் போத்தனூர் நகரம் மட்டுமே விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story