துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்


துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x

ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்களுக்கு கடந்த மாதமும், இந்த மாதமும் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர் சங்க தலைவர் நாகலட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ம.அன்பழகன் ஆகியோர் அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 மாத சம்பளமும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story