வனத்துறை சார்பில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தூய்மை பணி


வனத்துறை சார்பில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தூய்மை பணி
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் வனச்சரகம் சார்பில், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் கழக மாணவர்களுடன் இணைந்து உலக ஈரநில தினத்தையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் மற்றும் பள்ளி சுற்றுச்சூழல் கழக ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இந்த பணி நடந்தது. இதில் சுற்றுச்சூழல் கழக அமைப்பை சேர்ந்த மாணவர்கள், வனத்துறையினருடன் இணைந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும் ஆற்று பகுதியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் ஒகேனக்கல் வனச்சரகம் சார்பில் ஆலம்பாடி காவிரி ஆற்றங்கரையில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் மற்றும் ஊட்டமலை தலைமை ஆசிரியர் பாலாஜி ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்கள் மற்றும் சாரண-சாரணியர்கள் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் தூய்மை மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் வன குழு தலைவர் குமார், வனவர் செல்லமுத்து மற்றும் சக்திவேல், புகழேந்தி, ஆசிரியர் கருணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story