தோட்டப்பட்டில்பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி


தோட்டப்பட்டில்பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோட்டப்பட்டில் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

கடலூர்


கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் கடலூர் அருகே தோட்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தாமரைக்குளத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

இதற்கு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் ஞானவேல், அலுவலக மேலாளர் சரவணன், பயிற்சி அலுவலர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பள்ளி வளாகம், தாமரை குளத்தை சுத்தப்படுத்தினர்.

சாலையோரங்களில் இருந்த கருவேல மரங்களை அகற்றுதல், மரம் நடும் விழா, மழைநீர் சேகரிப்பு வடிகால் தூர்வாருதல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தர்மலிங்கம் வரவேற்றார். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கபில்தேவ், துணை தலைவர் தெய்வமணி, செயலாளர் சரண்யா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, தொழிற்பயிற்சி நிலைய உடற்கல்வி அலுவலர் வெங்கடாசலபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story