பள்ளிகளில் தூய்மை பணி


பள்ளிகளில் தூய்மை பணி
x
தினத்தந்தி 11 Jun 2023 12:30 AM IST (Updated: 11 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் தூய்மை பணி மும்முரமாக நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் தூய்மை பணி மும்முரமாக நடந்தது.

கோடை வெயில்

தமிழ்நாட்டில் கத்திரி முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

ஒத்திவைப்பு

ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நாளை (திங்கட்கிழமை) 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாகவே நாகை மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி வகுப்பறைகளில் கரும்பலகை, சுவர் உள்ளிட்டவற்றை புதுப்பித்து வருகின்றனர்.

மேலும் பள்ளி வளாகங்களில் மண்டியுள்ள புதர், தேங்கியுள்ள குப்பை, தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு தூய்மை பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. நாகை நகராட்சிக்குட்பட்ட சாமந்தான்பேட்டை தொடக்கப்பள்ளியில் தூய்மை பணிகளில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.


Next Story