தமிழ் இசை மூவர் மணிமண்டபத்தில் தூய்மை பணி
சீர்காழி தமிழ் இசை மூவர் மணிமண்டபத்தில் தூய்மை பணி நடந்தது.
மயிலாடுதுறை
சீர்காழி;
சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் கடந்த காலங்களில் தமிழை வளர்த்த அருணாசல கவிராயர், மாரிமுத்தாபிள்ளை, முத்து தாண்டவர் ஆகிய மூவருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டு கலை பண்பாட்டு துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தில் உள்ள வளாக பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது.பணியை நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தொடங்கி வைத்தார். சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு செடி கொடிகளை அகற்றி தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story