சுகாதார தூய்மை பணிகள் முகாம்


சுகாதார  தூய்மை பணிகள் முகாம்
x

பாபநாசம் பேரூராட்சியில் சுகாதார தூய்மை பணிகள் முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்.

பாபநாசம் பேரூராட்சியில் சுகாதார தூய்மை பணிகள் முகாம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி 9 -வது வார்டில் மேலரஸ்தா, காணியாளர்தெரு, வாத்தலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, தெற்கு வீதி, தெற்கு மட விளாகம் ஆகிய தெருக்களில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் களைக்கொல்லி, கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர், தெளிக்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், பேரூராட்சி பணியாளர் சாய் குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Next Story