தூய்மை பணி மக்கள் இயக்க ஊர்வலம்
திருத்துறைப்பூண்டியில் தூய்மை பணி மக்கள் இயக்க ஊர்வலம் நடந்தது
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தூய்மை பணி மக்கள் இயக்க ஊா்வலம் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழா நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வர்த்தகர் சங்கத் தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், என்ஜினீயர் மனோகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ரெஜினா பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலம் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மன்னை சாலை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ெரயில்வே கேட், வழியாக நகராட்சியை அடைந்தது. ஊா்வலத்தின் முடிவில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. திருத்துறைப்பூண்டி நகராட்சியை தூய்மை நகரமாக மாற்ற ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது. மேலும் தூய்மை பணியின் அவசியம் குறித்தும் நகராட்சியில் வாரம் 2 நாட்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும் என நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கூறினார்.