தூய்மை விழிப்புணர்வு பிரசார பேரணி
அம்பையில் தூய்மை விழிப்புணர்வு பிரசார பேரணி நடந்தது.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை நகராட்சியில் தமிழக அரசின் 'எனது குப்பை எனது பொறுப்பு' என்ற சுகாதார தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி நடைபெற்றது. அம்பை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின்படி நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன், அரசு தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், வார்டு கவுன்சிலர் அழகம்மை, மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோகிலா மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story