மாணவர்களுக்கு தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், பள்ளி செயலாளர் மற்றும் தாளாளர் உமரிசங்கர் ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பில், தூய்மையில் மக்களின் பங்களிப்பு, நம் நகரின் தூய்மை நம் ஒவ்வொருவரின் கடமை, எனது குப்பை எனது பொறுப்பு என்ற கருத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தும் வகையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியை இனிகோ கர்டோசா வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர் சி.ராஜசேகரன் கலந்து கொண்டு, மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் மறு சுழற்சி குப்பை என பிரித்தெடுப்பதற்கான செய்முறை விளக்கமளித்தார். தொடர்ந்து மாணவர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளர் மகாராஜா, பள்ளி முதல்வர் எஸ்.பி.மாரியம்மாள், துணை முதல்வர் சி. வாசுகி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.