கள்ளக்குறிச்சியில் தூய்மை திருவிழா


கள்ளக்குறிச்சியில் தூய்மை திருவிழா
x

கள்ளக்குறிச்சியில் தூய்மை திருவிழா கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை திருவிழா கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் சுப்ராயலு, ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், கள்ளக் குறிச்சி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றுவதற்கு 6 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பைகளை தரம்பிரித்து பெறுவது, நகர்ப்பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, போக்குவரத்திற்கு இடையூறாகவுள்ள விளம்பர பதாகைகளை அகற்றுவது, பஸ் நிலையங்கள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல், நீர்நிலைகள் மாசுபடுவதை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 20.09.2022 முதல் 30.09.2022 வரை தூய்மை பேரியக்கம் நடத்தி கள்ளக்குறிச்சி நகராட்சியை எழில்மிகு நகரமாக உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பின்னர் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூய்மை குறித்த உறுதிமொழி கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகரமன்ற துணைதலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினர், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story