'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மைப்பணி


நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மைப்பணி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதனூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் தூய்மைப்பணி

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே ஆதனூர் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்படி அனைத்து பொது மக்களுக்கும் ஊராட்சியை எவ்வாறு தூய்மைப்படுத்துவது, தன் சுத்தம், வீடு சுத்தம், தெரு சுத்தம், பொது இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ள இடங்களையும், கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களையும் மற்றும் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுடன் தூய்மை காவலர்கள் ஒன்று சேர்ந்து தூய்மைப்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அன்பரசன், நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நமச்சிவாயம், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா அன்பழகன், வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story