இலக்கியம்பட்டி ஏரியில் தூய்மை பணி-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


இலக்கியம்பட்டி ஏரியில் தூய்மை பணி-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:30 AM IST (Updated: 22 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற தூய்மை பணியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

தூய்மை பணி

தர்மபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் 4.30 ஹெக்டேர் பரப்பளவில் ஏரி உள்ளது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தர்மபுரி மாவட்ட நேரு இளைஞர் மையம் சார்பில் தூய்மை பாரதம் 2.0 திட்டத்தின் கீழ் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, இந்த இலக்கியம்பட்டி ஏரியில் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடும்பணியை மேற்கொண்டனர்.

இந்த தூய்மை பணியை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு அந்த பணியையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏக்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

தர்மபுரி நகராட்சிக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் மிக அருகில் அமைந்துள்ள இந்த ஏரியை புனரமைத்து மேம்படுத்தினால் மழை நீர் சேகரிப்பிற்கும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கும் சிறந்த இடமாக இந்த ஏரி அமையும். இந்த ஏரியை புனரமைத்து மேம்படுத்துவதற்கும், ஏரியை சுற்றி அழகிய மரக்கன்றுகள், பூஞ்செடிகள் வைத்து பாதுகாத்து பராமரித்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி சிறப்பாக நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் கலெக்டர் சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இலக்கியம்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கணேசன், இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ், நேரு இளைஞர் மைய திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story