'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மை பணி
51.புதுக்குடி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் தூய்மை பணி
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் ஊராட்சி ஒன்றியம் 51.புதுக்குடி ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம், பள்ளி வளாகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பல்வேறு தெருக்களில் தூய்மை பணி நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதேபோல் வடவேரில் ஊராட்சி தலைவர் மல்லிகா தலைமையில் தூய்மை பணிகள் நடந்தன. நிகழ்ச்சியில் மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், பணிமேற்பார்வையாளர் விஜயலட்சுமி, ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story