கம்பத்தில் தூய்மை பணி
கம்பத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நடந்தது
தேனி
கம்பம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் ஒவ்வொரு வார்டுகளிலும் சாக்கடை கால்வாய் தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், சாலையோர செடி, கொடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கம்பம் பகவதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பகவதியம்மன் கோவில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தூய்மை பணி நடந்தது. நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் பன்னீர் செல்வம், சுகாதார அலுவலர் அரசக்குமார், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story