சட்டைநாதர் கோவில் வீதிகளில் தூய்மை பணி
குடமுழுக்கு விழாவையொட்டி சட்டைநாதர் கோவில் வீதிகளில் தூய்மை பணி நடந்தத.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வருகிற 24-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நன்கு வீதிகளிலும் தூய்மை பணி மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் சட்டைநாதர் கோவில் வீதியில் நகராட்சி பணியாளர்கள் மெகா தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நான்கு வீதிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர், தெருவிளக்கு, தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story