தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் அண்ணாமலை, மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மாநில செயலாளர் கனி மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு 5 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story