முதல்-அமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு - தமிழக அரசு அரசாணை


முதல்-அமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு - தமிழக அரசு அரசாணை
x

காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இந்தக் குழு தயாரிக்க உள்ளது.

சென்னை,

காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதல்-அமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிர்வாகக் குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுனர்கள், தமிழக அரசின் மூத்த செயலாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இந்தக் குழு தயாரிக்க உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதால், முதல்-அமைச்சர் தலைமையில் அவ்வபோது ஆலோசனைகள் மேற்கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டங்களை இந்த குழு நிறைவேற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story