காலநிலை மாற்ற இயக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


காலநிலை மாற்ற இயக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் காலநிலை மாற்ற இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக அரசு குறைத்து வரும் நிலையில், இதில் மேலும் ஒரு முயற்சியாக காலநிலை மாற்ற இயக்கம் ஒன்றையும் தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் தமிழகத்தை காலநிலைக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் காலநிலை வல்லுனர்கள் கலந்து கொண்ட உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், 'காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு முயற்சியாக தமிழகத்தில் 25 அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்ற பசுமை பள்ளிகளாக மாற்றப்படும் இதற்காக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடலோரத்தில் அமைந்துள்ளதால் இங்கு ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க இயற்கை முறையிலான பயோஷீல்ட் என்ற புதிய யுக்தியை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளதாகவும், மக்களிடையே காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.


Next Story