திருமணம் ஆகாத ஏக்கத்தில்செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்திருக்கோவிலூர் அருகே பரபரப்பு


திருமணம் ஆகாத ஏக்கத்தில்செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் ஆகாத ஏக்கத்தில் செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் பத்மநாபன் (வயது 30). இவருக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை இவரது குடும்பத்தினர் செய்யவில்லை. அதேபோன்று குடும்பத்தில் சொத்து தொடர்பாகவும் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த பத்மநாபன் அதே ஊரில் உள்ள சுமார் 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில், பாதி தூரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று, பத்மநாபைனசமாதானபடுத்தி அவரை பத்திரமாக கீழே இறங்கி வரச் செய்தனர். பின்னர் பத்மநாபனை அவரது குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story