கோபி அருகே 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தவரின் கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை

கோபி அருகே 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தவரின் கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை
x

கோபி அருகே 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தவரின் கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தவரின் கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

திடீர் சோதனை

கோபி அருகே உள்ள கொளப்பலூரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கிளினிக் வைத்து ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வருகிறார். அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்றும், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள், சிறுவலூர் போலீசாருடன் சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

ஊசி மருந்துகள்

அப்போது கிளினிக்கில் ஆங்கில ஊசி மருந்துகள், ஊசி போடும் உபகரணங்கள் இருந்தன. அவற்றை அதகாரிகள் பறிமுதல் செய்தார்கள். மேலும் சம்பந்தப்பட்ட கிளினிக் வைத்து நடத்தி வருபவரிடம் அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார்கள். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர் ஆங்கில மருத்துவம் பார்த்தது உறுதியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Next Story