மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கம்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சை பிரிவு சார்பில், மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது. இதனை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை முதல்வர் சலீம் முன்னிலை வகித்தார்.
இதில் மும்பை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் கீதா பல்சார்க்கார் மற்றும் மகப்பேறு துறை பேராசிரியர்கள், மருத்துவ ஆராய்ச்சிகளின் வகைகள், பயன்கள், ஆராய்ச்சி செய்யும் முறை உள்பட பல்வேறு தலைப்புகளில் பேசினர். இந்த கருத்தரங்கில் திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் நல சங்க தலைவர் அமலாதேவி, சங்க நிர்வாகிகள், மகப்பேறு டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை மகப்பேறு துறை தலைவர் கீதா, டாக்டர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story