மதுக்கடையை மூட வேண்டும்
சீர்காழி அருகே புதுப்பட்டினத்தில் மதுக்கடையை மூட வேண்டும் என்று பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை;
சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி பா.ம.க. மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் கிராமத்தில் அரசு மதுபான கடை எண் இயங்கி வருகிறது. இந்த கடை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பள்ளிக்கு அருகில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.எனவே மாணவர்கள், பெண்கள் நலன் கருதி புதுப்பட்டினம் கிராமத்தில் தற்போது இயங்கி வரும் அரசு மதுபான கடையை மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story