18 டாஸ்மாக் கடைகள் மூடல்


18 டாஸ்மாக் கடைகள் மூடல்
x

நாமக்கல் மாவட்டத்தில் 18 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல்

தமிழகம் முழுவதும் பள்ளி கூடங்கள் மற்றும் வழிபாட்டு ஸ்தலங்கள் அருகில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதில் சேலம் மண்டலத்தில் மட்டும் 59 கடைகள் மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 187 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி கூடங்கள் மற்றும் வழிபாட்டு ஸ்தலங்கள் அருகில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த கடைகள் என 25-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருந்தது. இவற்றில் 18 கடைகளை இன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story