தூய்மை பணியாளர்களுக்கு உடைகள்


தூய்மை பணியாளர்களுக்கு உடைகள்
x

வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உடைகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

வேலூர்

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு துணிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் காந்திரோட்டில் நடந்தது.

சங்கத் தலைவர் சி.பி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர் வி.எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் உள்ளிட்ட துணிகளை வழங்கினார்.

மேலும் அவர்களது பணியை பாராட்டி பேசினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் மூர்த்தி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story