மேக மூட்டத்துடன் கடல்போல் காட்சியளித்த கோடநாடு காட்சி முனை- சுற்றுலா பயணிகள் ஆச்சர்யம்


மேக மூட்டத்துடன் கடல்போல் காட்சியளித்த கோடநாடு காட்சி முனை- சுற்றுலா பயணிகள் ஆச்சர்யம்
x

கோத்தகிரி அருகே மேக மூட்டத்துடன் கடல்போல் காட்சியளித்த கோடநாடு காட்சி முனையை சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே மேக மூட்டத்துடன் கடல்போல் காட்சியளித்த கோடநாடு காட்சி முனையை சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

கோடநாடு காட்சி முனை

கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக கோடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு சென்று, அங்குள்ள காட்சி முனை தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் உள்ள பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள், ரங்கசாமி மலை, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்டவற்றை கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த காட்சிமுனை கோத்தகிரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

செல்போனில் படம் பிடிக்கும் சுற்றுலா பயணிகள்

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேகமூட்டம் காரணமாக கோடநாடு காட்சி முனையில் இருந்து சமவெளிப் பகுதிகளைக் காண முடியா விட்டாலும், அழகிய மேகக் கூட்டங்கள் கடல் அலைகள் போல காட்சியளிக்கின்றன. மேலும் மேகக் கூட்டங்களின் மேல் அங்குள்ள ரங்கசாமி மலைசிகரம் மற்றும் மலைகள் அழகாக காட்சியளிக்கிறது.

இந்த கண்கொள்ளாக் காட்சியை ஆச்சர்யத்துடன் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு களிப்பதுடன், தங்களது செல்போனில் படம் பிடித்துச் செல்கின்றனர்.


Next Story