முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
உடுமலை,
உடுமலை அமராவதி நகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதையொட்டி, அவர் செல்லும் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முதல்-அமைச்சர் வருகை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளி வைரவிழா வருகிற 15மற்றும்16-ம்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 16-ம்தேதி நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்காக, வருகிற 15-ம்தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி முடிந்ததும் உடுமலை வழியாக திருமூர்த்திமலைக்கு சென்று, அங்கு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். அடுத்த நாள் (16.7.2022) காலை அங்கிருந்து புறப்பட்டு அமராவதி நகருக்கு சென்று சைனிக்பள்ளி வைரவிழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உடுமலை, பல்லடம் வழியாக கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ் சாலையில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாலையின் ஓரங்களில் இருந்த மண்மேடுகள் அகற்றப்பட்டு அந்த பகுதிகள் சமன்படுத்தப்பட்டுவருகின்றன.
அங்கு குவிந்திருந்த மண், சாலையோர இருந்த சிறு குப்பைகள் லாரிகள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. சாலையின் நடுவில் உள்ள மையத்தடுப்புகளில் வளர்ந்து காய்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மையத்தடுப்புகளில் நல்ல நிலையில் உள்ள செடிகள் மட்டும் அப்படியே விடப்பட்டன.
சீரமைப்பு பணிகள்
உடுமலை நகரில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதி நகர்மற்றும் பல்லடம் செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில், சீரமைப்பு (பேட்ஜ் ஒர்க்) பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.