கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு


கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 15 Nov 2022 12:30 AM IST (Updated: 15 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

திருவாரூரில் நேற்று திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் 69-வது கூட்டுறவு வார விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கி கொடியேற்றினார். பொது மேலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்து உறுதி மொழியினை படித்தார். அப்போது மேலாளர் காமராஜ் உள்ளிட்ட திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றனர். கூட்டுறவே நாட்டுயர்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற வாசகங்கள் உறுதிமொழியில் இடம் பெற்றிருந்தன.


Next Story