கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஒத்திகை
திசையன்விளை அருகே கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஒத்திகை நடத்தினர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் கடற்கரை, அந்தோணியார் ஆலய கடற்கரை, கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இரவு, பகலாக இரண்டு நாட்கள் நடந்தது. கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இதேபோல் கடற்கரை சாலைகளிலும் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டது. சாதாரண உடையில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் வரும் போலீசாரை அடையாளம் கண்டுபிடிப்பதே பாதுகாப்பு ஒத்திகையாகும்.
Related Tags :
Next Story