விழுப்புரம் அருகேசேவல் சண்டை; 4 பேர் கைது


விழுப்புரம் அருகேசேவல் சண்டை; 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி பம்பை ஆற்றின் ஓரத்தில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த விழுப்புரம் அருகே பெத்துரெட்டிக்குப்பத்தை சேர்ந்த அஜித் (வயது 24), விழுப்புரம் வண்டிமேடு ரஞ்சித்குமார் (33), விழுப்புரம் கே.கே.சாலை செல்வக்குமார் (35), முகையூர் மேட்டுத்தெருவை சேர்ந்த அந்தோணி குரூஸ் (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story