ரூ.63 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் பருப்பு வியாழக்கிழமை அன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அந்த வகையில் நேற்று 133 விவசாயிகள் 81 ஆயிரத்து 193 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.86-க்கும், குறைந்தபட்சம் ரூ.69.20- க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.63 லட்சத்து 23 ஆயிரத்து 260- க்கு வணிகம் நடைபெற்றது.
இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.