ரூ.2½லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
திருப்பூர்
காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 9 விவசாயிகள் 67 மூட்டைகள் (3ஆயிரத்து 302 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.59 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.81 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.65-க்கும், சராசரியாக ரூ.80-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்.
Next Story