ரூ.25ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
திருப்பூர்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகள் 7 மூட்டைகள் (320 கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இந்த ஏலத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.81 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.60-க்கும் ஏலம் போனது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்.
Next Story