ரூ.1¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 விவசாயிகள் 46 மூட்டைகள் (1,850 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.80 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.56-க்கும், சராசரியாக ரூ.78- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.
Next Story