சாரல் மழையால் தேங்காய் உலர்த்தும் பணிகள் பாதிப்பு


சாரல் மழையால் தேங்காய் உலர்த்தும் பணிகள் பாதிப்பு
x

காங்கயம் பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர் களங்களில் கொப்பரை தேங்காய் உலர்த்தும் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர்

காங்கயம் பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர் களங்களில் கொப்பரை தேங்காய் உலர்த்தும் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர் சாரல் மழை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் பல நூற்றுக்கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை அமைத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்புவரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்சாரல் மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

உலர்த்தும் பணி பாதிப்பு

இந்த நிலையில் காங்கயம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்துவரும் சாரல் மழையாலும் மேலும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் தேங்காய் களத்தில் உலர்த்தும் பணிகள் முற்றிலுமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய்களை கொண்டு மூடி வைத்துள்ளனர்.

இதில் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களும் போதிய வேலையில்லாமலும் அதனால் வருமானம் இன்றியும் தவித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story