தென்னையை தாக்கும் பூச்சி -நோய்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம்


தென்னையை தாக்கும் பூச்சி -நோய்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம்
x

ஒரத்தநாடு பகுதியில் தென்னையை தாக்கும் பூச்சி -நோய்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாபட்டு தெற்கு சிவக்கொல்லை மற்றும் வடசேரி கிராமத்தில் தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒரத்தநாடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சண்முக பிரியா ஆகியோர் தென்னை சாகுபடி செய்யும் வயல்களில் உள்ள பூச்சி மற்றும் நோய்கள் தாக்கப்பட்ட மரங்களை பார்வையிட்டு நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து பேசினர். ஆய்வின் போது காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு, ருகோஸ் வெள்ளை ஈ குரும்பை (இளம்காய்) துளைப்பான் மற்றும் குருத்து அழுகல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டது. முகாமில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் செய்து இருந்தனர்.


Next Story