300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
நெமிலி அருகே 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ் வீதி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன், துணை வேளாண்மை இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குனர் அருணா குமாரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு, கீழ் வீதி கிராமத்தில் உள்ள 300 விவசாயிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் விதம் 600 தென்னங்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏரி நீர்ப்பாசன தலைவர் சிவகாமிநாதன், ஒன்றிய செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.