வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
வடகரையில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண்மை திட்டம் 2023-24-ன் படி 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 வீதம் 600 விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா, வேளாண் அலுவலர் செந்தில்வாசன், ஊராட்சி மன்ற தலைவர் மோகன், துணைத்தலைவர் முத்து முகமது, வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல், ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story