பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள்


பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள்
x

கல்லாலங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

வேளாண்மைத் துறை சார்பில் சோளிங்கரை அடுத்த கல்லாலங்குப்பத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடு தோறும் தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் மேகவண்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் கலந்து கொண்டு 300 குடும்பத்திற்கு தலா இரண்டு தென்னங்கன்று வீதம் 600 தென்னங்கன்றுகளை வாங்கினார்.


Next Story