காபி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காபி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

ஏற்காட்டில் காபி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

ஏற்காடு:-

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள காபி வாரிய அலுவலகம் அருகில் தமிழ்நாடு காபி தோட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏற்காடு பொறுப்பாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில உதவி செயலாளர் பெருமாள் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காபி வாரியம் மூலம் காபி கொட்டையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், பட்டா இல்லாத காபி விவசாயிகள் உள்பட அனைத்து காபி விவசாயிகளுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும், இடு பொருட்கள் மானிய விலையில் அனைத்து சிறு,குறு காபி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏற்காடு பகுதியை சேர்ந்த காபி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் இருந்து காபி வாரிய அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்த அலுவலரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.


Next Story