கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நவீன சலவையகங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, நவீன சலவையகங்களை 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திடவேண்டும்.

அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

வயது வரம்பு

பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள், சென்னை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும். இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர்கூறியுள்ளார்.


Next Story