மத்திய-மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா


மத்திய-மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா
x
திருப்பூர்


காங்கயம் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மத்திய-மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.

கலை அறிவியல் கல்லூரி

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டி மையம் ஆகியவை சார்பில் அரசு கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கவிழா கல்லூரி கருத்தரங்க வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் பேராசிரியர் அ.நல்லசிவம் வரவேற்று பேசினார். கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மைய அதிகாரி ஆர்.சத்யபார்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;-

போட்டி தேர்வுகள்

படித்து பட்டம் பெற்ற பின் மாணவ-மாணவிகள் அனைவரும் டி.என்.பி.எஸ்.சி, குரூப் 2, குரூப் 2-ஏ, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், தீயணைப்பு அலுவலர் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி தேர்வுகள் எழுதி வெற்றி பெற வேண்டும்.

மத்திய, மாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று, தயார் செய்து, விடா முயற்சியுடன் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு துணை நூல்கள், இணையவழி நூல்களை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.

சமூக வலைத்தளங்கள் தவிர்ப்பு

மாணவ, மாணவிகள் சமூகமத்திய-மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா வலைத்தளங்களான முகநூல், வாட்ஸ் -அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் உடல், மனம், நலம், ஆரோக்கியம், கல்வி, நல் ஒழுக்கத்துடன், பெற்றோர்களை மதித்து வணங்கி வாழ்ந்து காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ப.கொமரசாமி நன்றி கூறினார்.


Next Story