தொடர்மழையால் தீடீரென இடிந்து விழுந்த கான்கிரீட் மேற்கூரை - பீதியில் மக்கள்
திருத்தணி அருகே மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ரங்காபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு, மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், மூன்று தொகுப்பு வீடுகளின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால், அதனை சீரமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story