'நம்மஊரு சூப்பரு' திட்டத்தில் ஒரே நாளில் 100 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிப்பு
‘நம்மஊரு சூப்பரு’ திட்டத்தில் ஒரே நாளில் 100 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டது,
'நம்மஊரு சூப்பரு' திட்டத்தில் ஒரே நாளில் 100 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டது,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதி 2-ல் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் வீடு வீடாக திடக்கழிவுகளை சேகரிக்கும் பணி மற்றும் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வழங்குவதையும், திடக்கழிவு மேலாண்மை கூடத்தையும் கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர், தூய்மைப் பணியாளர்களுடன் 'செல்பி' எடுத்துக்கொண்டார்.
அப்போது கலெக்டர், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் ேசகரிக்கும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இப்பகுதியில் குப்பைகளை எரிக்க வேண்டாம். அப்படி எரிக்கும்போது, அதில் இருந்து நச்சுப்புகை வெளியாகி நம்முடைய உடலுக்கு தீங்கு விைளவிக்கிறது. இந்தப் பகுதியை பொதுமக்கள் நன்கு தூய்மையாக வைத்திருக்க ேவண்டும், எனக் ேகட்டுக்கொண்டார்.
பின்னர் பொதுமக்களிடம் அவர் குறைகளை ேகட்டறிந்தார். அங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படும். மக்கள் குறைகள் விரைந்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என கலெக்டர் தெரிவித்தாா்.
ேமலும் இருணாப்பட்டு ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் 100 மூட்டை பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
இருணாப்பட்டு ஊராட்சி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிப்பதில் முன்மாதிரி ஊராட்சியாக இருப்பதாக பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளம் சத்தியன் சயனம்மாள், சுப்பிரமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி பூபதி, தூய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். அப்போது திட்ட இயக்குனர் செல்வராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.